இந்த தளம் பற்றி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்..

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறோம்.

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.

அன்பான சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

இறைவனின் பேரருளால் நாங்கள் இந்த வலைதளத்தை துவக்கியிருப்பதன் நோக்கம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே தவிர வேறில்லை. இறைவன் எங்களின் இந்த முயற்சியை அங்கீகரித்து மக்கள் இதன் மூலம் பயன்பெறும் வகையில் ஆக்கியருள பிரார்த்திக்கிறோம்.

இந்த வலைதளம் , ஒரு குறிப்பிட்ட இயக்க சார்போ அல்லது ஒரு குறிப்பிட்ட இயக்க எதிர்ப்போ கொண்டது இல்லை! இறைவன் நமக்கு இட்ட பெயராகிய ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ‘நாம் அனைவரும் மார்க்க சகோதரர்கள்’ என்பதைக் குறிக்கோளாகக் கொண்டது.

இதில் உள்ள ஆக்கங்கள் அனைத்தும் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தது. இதில் தவறுகள் இருந்து யாரேனும் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினால் மிகுந்த நன்றியுடன் திருத்திக் கொள்வோம். மேலும் இந்த வலைதளத்திற்கான வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தங்களுடைய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் உரைகளை இதில் இடம் பெற வேண்டுபவர்கள், எங்களுக்கு அனுப்பினால் இன்ஷா அல்லாஹ் அதை நாங்கள் பரிசீலித்து வெளியிடுவோம். ஆக்கங்களை அனுப்புவோர் பின்வருபவற்றை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

  1. ஆக்கங்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்
  2. ஆக்கங்கள் சுருக்கமானதாகவும், அதே நேரத்தில் கூற வேண்டிய கருத்தை தெளிவாகக் கூறக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
  3. சமுதாயத்தில் நடைபெறும் ஷிர்க், பித்அத் மற்றும் பிற தவறுகளைச் சுட்டிக் காட்டலாமே தவிர தனிநபர் விமர்சனம் கண்டிப்பாக கூடாது.
  4. ஆக்கங்கள், ஒரு குறிப்பிட்ட இயக்கம் சார்புடையதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தையோ அல்லது அதன் தலைவர்களை எதிர்க்கின்றதாகவோ, விமர்சிப்பதாகவோ கண்டிப்பாக  இருக்கக்கூடாது.
  5. இயக்கங்களின் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகள் கண்டிப்பாக வெளியிடப்படாது
  6. கருத்து வேறுபாடுகள் நிறைந்த ஆக்கங்களாக இருந்தால்  அவை மார்க்க அறிஞர்களின் பரிசீலனைக்குப் பிறகு பதிவதற்கு தகுதியுடையதாக இருந்தால் மட்டுமே பதியப்படும்.
  7. அனுப்பப்படும் ஆக்கங்களை பதிவதற்கோ அல்லது பதியாமல் இருப்பதற்கோ நிர்வாகிக்கு முழு அதிகாரம் உள்ளது.

இந்த வலைத்தளத்தின் முக்கிய குறிக்கோள், சமுதாயத்தில் மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் மார்க்கத்திற்கு முரணான ஷிர்க், பித்அத் போன்ற அநாச்சாரங்களைக் களைவதற்காகவும், மார்க்க அடிப்படை விசயங்களைத் தேவைப்படுவோருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துக் கூறுவதற்காகவும் தானே தவிர மார்க்கத்தில் பிரிவுகளை உண்டாக்குவதற்கல்ல! எனவே தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய, சமுதாய நலனில் அக்கரையுடைய சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தும் கட்டுரைகள், கவிதைகள் வரவேற்கப்படுகின்றது. இத்தகைய ஆக்கங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.

அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தை அதன் தூய வடிவில் தமிழ் பேசும் மக்களிடையே எடுத்துச் கூற எனக்கும் உங்களுக்கும் அதிக ஆர்வத்தைத் தந்து அதன் மூலம் ஈருலகிலும் அதிக பலன்களை அல்லாஹ் நமக்கு அருள்வானாகவும். ஆமின்.

நிர்வாகி,